< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது
|22 Sept 2024 9:18 AM IST
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார்.
அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.