< Back
மாநில செய்திகள்
விபத்தில் பலியான என்ஜினீயரின் குடும்பத்திற்கு ரூ.64 லட்சம் நஷ்ட ஈடு
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்தில் பலியான என்ஜினீயரின் குடும்பத்திற்கு ரூ.64 லட்சம் நஷ்ட ஈடு

தினத்தந்தி
|
12 March 2023 12:19 AM IST

விபத்தில் பலியான என்ஜினீயரின் குடும்பத்திற்கு ரூ.64 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் முதுகுடியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). இவருடைய மகன் சிவா. என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 14.6.2019 அன்று காரில் ஊருக்கு வரும்போது திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் அவர் பலியானார். இதுகுறித்து அவரது பெற்றோர் மாவட்ட கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து விபத்தின் பலியான என்ஜினீயர் சிவாவின் குடும்பத்தினருக்கு ரூ. 64 லட்சத்து 2 ஆயிரத்து 364 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்