< Back
மாநில செய்திகள்
6,100 உணவு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

6,100 உணவு நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும்

தினத்தந்தி
|
1 Oct 2023 1:30 AM IST

உணவு தொழில் செய்யும் 6,100 நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

உணவு தொழில் செய்யும் 6,100 நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.


வழிகாட்டுதல் கூட்டம்


உணவு பாதுகாப்பு துறை சார்பில், மாவட்ட அளவிலான வழி காட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட உணவு பாதுகாப்புஅதிகாரி தமிழ்செல்வன், பேரூராட்சி உதவி இயக்குனர், துவாரகநாத்சிங், நகர்ப்புற நிலவரித் திட்ட உதவி கமிஷனர் இளவரசி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீரா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உள்பட அதிகாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-


6,100 உணவு நிறுவனங்கள்


உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவு தொழில் புரியும் உணவு வணிகர்கள் தங்களின் வணிகத்தின் தன் மைக்கேற்ப உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்று, உரிமம் பெறுதல் கட்டாயம். இன்னும் 6100 உணவு நிறுவனங்கள் பதிவு சான்று உரிமம் பெற வேண்டும்.

அது இல்லாமல் உணவு வணிகம் செய்வது சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும். எனவே உணவு வணிக நிறுவனங்கள் உடனடியாக உரிமம் பதிவுச்சான்று பெற வேண்டும்.


நிரந்தர விற்பனைக்கடைகள், ஸ்டால்கள், வண்டிகள் மூலம் காய்கறி, பழம் விற்பவர்களுக்கு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சந்தை அவசியம்.


உழவர் சந்தைகள்


இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள 8 உழவர் சந்தைகள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன. சுந்தராபுரம், வடவள்ளி, மேட்டுப்பாளை யம், சிங்காநல்லூர் உழவர்சந்தைகள் சுத்தமான காய்கறி, பழங்க ளை விற்பனை செய்யும் சந்தைகள் என்ற தரச்சான்று பெற்று உள்ளது.

ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி, சூலூர், குறிச்சி உழவர் சந்தைகள் தரச்சான்று பெற கூடுதல் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற அனைத்து உணவு வணிகர்களும் தங்களது வணிகத்தின் வகைக்கு ஏற்ப உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறதல் கட்டாயம் ஆகும்.


தரக்குறைவான உணவு, கலப்பட டீத்தூள், எண்ணெய், அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம் கலந்த உணவுகள், மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் சம்பந்தமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்