< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
அண்ணாநகரில் வீட்டில் இருந்த 61 பவுன் நகை மாயம்
|25 Jun 2022 8:45 AM IST
அண்ணாநகரில் வீட்டில் இருந்த 61 பவுன் நகை மாயமானது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). இவர் தனியார் கம்ெபனியில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், தனது வீட்டில் வைத்து இருந்த 61 பவுன் நகைகள் திடீரென மாயமாகி உள்ளது. காணாமல் போன தங்க நகைகளை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார்.
இதுபற்றி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ரவிச்சந்திரன் வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகைகள் மாயமானது எப்படி? அவரது வீட்டுக்கு யார், யாரெல்லாம் வந்து சென்றார்கள்? என்பது குறித்தும், நகைகள் திருட்டு போனது உண்மைதானா? எனவும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.