< Back
மாநில செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 607 பேர் பங்கேற்பு
ஈரோடு
மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 607 பேர் பங்கேற்பு

தினத்தந்தி
|
27 Jun 2022 2:40 AM IST

ஈரோட்டில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 607 பேர் பங்கேற்றனர். தேர்வு மையத்தை கோவை மண்டல ஐ.ஜி. சுதாகா் நேரில் ஆய்வு செய்தார்.

ஈரோட்டில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 607 பேர் பங்கேற்றனர். தேர்வு மையத்தை கோவை மண்டல ஐ.ஜி. சுதாகா் நேரில் ஆய்வு செய்தார்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நேரடி நியமனம் செய்ய மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நாளில் 3 மையங்களில் காலை பொது தேர்வர்கள் 4 ஆயிரத்து 428 பேர் பொது அறிவு தேர்வினையும், மதியம் 607 போலீசார் உட்பட 4 ஆயிரத்து 936 பேர் தமிழ் தகுதி தேர்வினையும் எழுதினர்.

ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில், போலீசார்களுக்கான பொது அறிவுத்தேர்வு ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. முன்னதாக தேர்வு எழுத வந்த 607 போலீசார்களையும் தீவிர சோதனை செய்து, தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்