< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!
|13 Nov 2023 2:51 AM IST
தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு உற்பத்தியான பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை பாதிப்பு, பட்டாசு உற்பத்தியில் தொய்வு, பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றால் தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்க தாமதமான காரணத்தால், தமிழக பட்டாசு விற்பனையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் குறைந்துள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.