< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வார இறுதியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
|5 Oct 2023 5:09 PM IST
தமிழகம் முழுவதும் நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வார இறுதி நாட்களையொட்டி தமிழகம் முழுவதும் நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகளும், பெங்களூரு, கோவை, மதுரை உள்ளிட்ட மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.