< Back
மாநில செய்திகள்
அருமனை அருகே 600 ரப்பர் ஷீட்டுகள் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அருமனை அருகே 600 ரப்பர் ஷீட்டுகள் திருட்டு

தினத்தந்தி
|
8 March 2023 3:12 AM IST

அருமனை அருகே 600 ரப்பர் ஷீட்டுகள் திருட்டு ேபானது.

அருமனை:

அருமனை அருகே கடையாலுமூடு போங்கின் காலை பகுதியை சேர்ந்தவர் சுதீர். இவரது தோட்டத்தில் ரப்பர் ஷீட் உலர் புகை அறை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ரப்பர் ஷீட்டை உலர்வதற்காக வைத்திருந்தனர். மேலும் தனி அறையில் உலர்ந்த ஏராளமான ஷீட்டுகளை அடிக்கி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்து 600 ரப்பர் ஷீட்டுகளை திருடி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். இதுபற்றி கடையாலுமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--


மேலும் செய்திகள்