< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|2 July 2022 12:57 AM IST
விற்பனை செய்வதற்காக கடத்தி சென்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சூரப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 600 கிலோ ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த வேனுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடையக்குடியை சேர்ந்த சுகுமார் (வயது 33), அன்னசத்திரத்தை சேர்ந்த ராமன் (53) ஆகியோரை பிடித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்புவிடம் ஒப்படைத்தனர். பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.