< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பொன்னேரி சாலையில் கிடந்த அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|28 April 2023 4:50 PM IST
பொன்னேரி அருகே 600 கிலோ ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக இருந்த புகாரின் பேரில் பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் உத்தரவின் பேரில் உணவு பொருள் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயகீர்பிரபு ரேஷன் கடைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு நகரின் சாலை பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கேட்பாராற்ற நிலையில் 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலரை கண்டதும் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவானது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தச்சூர் கூட்டு சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார்.