< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கம்..!!
|8 Nov 2023 12:43 AM IST
கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் 60 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் தெற்கு ரெயில்வே சார்பில் 60 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை - நாகர்கோவில் இடையே 11 ரெயில் சேவை, சென்னை - நெல்லை இடையே 8 ரெயில் சேவை, கொச்சிவேலி - பெங்களூரு இடையே 4 ரெயில் சேவை, சென்னை - சந்திரகாசி இடையே 6 ரெயில் சேவை, சென்னை - புவனேஷ்வர் இடையே 6 ரெயில் சேவை, நாகர்கோவில் - பெங்களூரு இடையே 6 ரெயில் சேவை, நாகர்கோவில் - மங்களூரு இடையே 6 ரெயில் சேவை, சென்னை - மங்களூரு இடையே 6 ரெயில் சேவை, நெல்லை - சென்னை இடையே 6 ரெயில் சேவை, எர்ணாகுளம் - தன்பாத் இடையே 1 ரெயில் சேவை என மொத்தம் 60 சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.