< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஆவடியில் ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது
|22 Aug 2023 3:24 PM IST
ஆவடியில் ஒரே நாளில் 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ரவுடிகளை கைது செய்யும் தொடர் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதன்படி கொலை, கஞ்சா மற்றும் சரித்திர பதிவேடுகளில் சம்பந்தப்பட்ட 60 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 28 பேர், கொலை முயற்சி வழக்குகளில் 11 பேர், கஞ்சா வழக்கில் ஒருவர், பிடியாணை குற்றவாளி ஒருவர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 19 பேர் என மொத்தம் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.