< Back
மாநில செய்திகள்
போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
12 Jun 2022 8:16 AM IST

போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னையை அடுத்த முகலிவாக்கம், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி மற்றும் மகன் இருவரும் பெங்களூரு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமார், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த ஜெயக்குமார், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 60 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்