< Back
மாநில செய்திகள்
60 சதவீத பட்டாசு கடைகள் திறப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

60 சதவீத பட்டாசு கடைகள் திறப்பு

தினத்தந்தி
|
1 Sept 2022 12:58 AM IST

வெம்பக்கோட்டை பகுதியில் 60 சதவீத பட்டாசு கடைகள் திறக்கப்பட்டன.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் 60 சதவீத பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது. பட்டாசு கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பட்டாசுகளை பார்வையில் படும் வகையிலும் விதவிதமாக அடுக்கி வைக்க கூடுதல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பட்டாசு விற்பனையில் பட்டாசு கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசின் தன்மை குறித்து செயல் விளக்கமும், பட்டாசு வெடிக்கும் தன்மை பற்றியும் எடுத்து கூறினர்.


மேலும் செய்திகள்