< Back
மாநில செய்திகள்
சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்ட 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்ட 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி சாவு

தினத்தந்தி
|
24 April 2023 2:21 AM IST

சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்ட 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி இறந்தன. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே கூண்டுகளில் அடைக்கப்பட்ட 60 ஆட்டு குட்டிகள் தீயில் கருகி இறந்தன. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

60 ஆட்டு குட்டிகள் சாவு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை கிராமம் சங்கநேரியை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 36). இவர் குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள குறண்டி பகுதியில் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது 2 கூண்டுகளில் 60 ஆட்டுகுட்டிகளை அடைத்து வைத்து விட்டு சென்றார். மதியம் 1 மணி அளவில் திரும்பி வந்தார். அப்போது வயலில் தீ எரிந்து கொண்டு இருந்தது. கடாகிடைகளில் அடைக்கப்பட்டு இருந்த 60 ஆட்டு குட்டிகளும் தீயில் கருகி இறந்து கிடந்தன. இதை பார்த்ததும் சுடலையாண்டி கதறி அழுதார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வயலில் எரிந்த தீயை அணைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற யாரோ பீடியை அணைக்காமல் தூக்கி வீசியதாகவும், அதன் மூலம் தீ விபத்து நடந்து ஆட்டு குட்டிகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்தால் ஆட்டு குட்டிகள் இறந்ததா? அல்லது யாராவது தீயை வைத்து விட்டு சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்