< Back
மாநில செய்திகள்
நெல்லை வந்தே பாரத் உள்பட 6 ரெயில்கள் நாளை ரத்து
மாநில செய்திகள்

நெல்லை வந்தே பாரத் உள்பட 6 ரெயில்கள் நாளை ரத்து

தினத்தந்தி
|
20 Feb 2024 5:45 PM IST

விழுப்புரம் - திருச்சி இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் விருதாச்சலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் செய்திகள்