விழுப்புரம்
அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
|திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் கைவரிசை
திண்டிவனம்
திண்டிவனம்அம்மன் நகர் சேர்ந்த நடராஜன் மனைவி காமாட்சி( வயது 45). இவர் நேற்று திண்டிவனம் வட ஆலப்பாக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதேபோல் திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் மனைவி சம்யுக்தா(30) என்பவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ரோசணை பேட்டை சரவண பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவி சித்ரா(46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சித்ராவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் தங்க சங்கிலி கையில் சிக்காததால் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். அடுத்தடுத்து 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.