< Back
மாநில செய்திகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
மாநில செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தினத்தந்தி
|
10 May 2023 9:34 PM IST

ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அளிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சென்னை அண்ணாசாலையில், 18 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 1.12.2019 அன்று பெறப்பட்ட ஊதியத்தில் இருந்து 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்