< Back
மாநில செய்திகள்
வரிவிதிப்பில் 6 சதவீதத்தை திருப்பி வழங்க வேண்டும்  கட்டுனர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வரிவிதிப்பில் 6 சதவீதத்தை திருப்பி வழங்க வேண்டும் கட்டுனர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
28 May 2023 12:04 AM IST

வரிவிதிப்பில் 6 சதவீதத்தை திருப்பி வழங்க வேண்டும் கட்டுனர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூரில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் பெரம்பலூர் மையத்தின் 2023-25-ம் ஆண்டிற்கு புதிய தலைவராக கலை கிரானைட்ஸ் மற்றும் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் தர்மராஜ், துணைத்தலைவராக இமயவரம்பன், செயலாளராக பொறியாளர் ஜோதிவேல், இணைச்செயலாளராக பொறியாளர் குணாளன், பொருளாளராக ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா அரியலூர் சாலையில் உள்ள ஜே.ஜே.மகாலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்நிக்கோபார் தீவுகள் அடங்கிய மாநிலங்களின் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி, புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்திவைத்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாநில திறன்மேம்பாட்டுக்குழு தலைவர் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் தேசிய காப்பாளர் திருசங்கு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து சங்கத்தின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் முன்னாள் தேசிய துணைத்தலைவர் சின்னசாமி, மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஆகியோர் நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினர். விழாவைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் அய்யப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2021-ம் ஆண்டு கட்டுமானத்துறையில் விதிக்கப்பட்டிருந்த சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) 12 சதவீதத்தில் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.

வரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை தொடர்ந்து 6 சதவீத உயர்வை அந்தந்த துறை வாயிலாக ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு எங்களது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், அதில் ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ஒப்பந்த தொகை மதிப்பீட்டில் குறிப்பிட்ட தொகையை உயர்த்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்