திருநெல்வேலி
கஞ்சா வைத்திருந்த 6 பேர் சிக்கினர்
|நெல்லையில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் சிக்கினர்.
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரதிநகர் பகுதி மற்றும் கோட்டூர் ரோடு காந்தி சிலை அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்தனர். விசாரணையில், வண்ணார்பேட்டையை சேர்ந்த முருகன் மகன் மதிமுருகன் (வயது 19), பாளையங்கோட்டை சன்னதி தெருவை சேர்ந்த முத்துசங்கர் (23) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை சந்திப்பு போலீசார் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த விக்னேஷ் (35) என்பவரை கைது செய்து 60 கிராம் கஞ்சாவும், தச்சநல்லூர் போலீசார் வாலாஜா பேட்டை நடுத்தெருவை சேர்ந்த ஸ்ரீராம் நாதன் (21) என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலப்பாளையம் போலீசார் நாகம்மாள்புரத்தை சேர்ந்த மகேந்திரன் (37), நெல்லை டவுன் போலீசார் காவல்பிறை தெருவை சேர்ந்த சங்கர் (34) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.