< Back
மாநில செய்திகள்
கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2023 2:36 AM IST

கோபி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

கடத்தூர்

கோபி போலீசார் பாரியூர் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது தகர பாலம் என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தது. உடனே போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோபியை சேர்ந்த அப்புசாமி (வயது 56), குமார் (50), சோமசுந்தரம் (30), மோகன்ராஜ் (27), பாலு (56), ராம்குமார் (27) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய ரூ.3,050-யும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்