< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 6 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 6 பேர் கைது

தினத்தந்தி
|
13 April 2023 11:18 AM IST

மதுரவாயலில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த மதுரவாயல் பைபாசில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விடப்படுகிறதா என தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்ேபாது மஞ்சா நூல் காத்தாடியை பறக்க விட்ட மதுரவாயலை சேர்ந்த துரை மாணிக்கம் (வயது 45), பாலாஜி (24), கணேசன் (43), வேல் (27), அரிகிருஷ்ணன் (27), முரளி (31), அகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்