< Back
மாநில செய்திகள்
பெண்களை விபசாரத்தில்ஈடுபடுத்திய 6 பேர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பெண்களை விபசாரத்தில்ஈடுபடுத்திய 6 பேர் கைது

தினத்தந்தி
|
14 July 2023 12:27 AM IST

பெண்களை விபசாரத்தில்ஈடுபடுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் சந்தேகத்துக்கு புறம்பாக ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நமணசமுத்திரம் சுப்பு நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த புதுக்கோட்டை ரவி (வயது 52), துரைமுகமது (50), பேராவூரணி ஆதலூர் கணபதி (33), ஆலங்குடி வடகாடு வேலாயுதம் (46), திருமயம் மேலப்பனையூர் ராமச்சந்திரன் (47), சேலம் அக்ரஹாரம் சபரிநாதன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 4 பெண்களையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பணம், செல்போன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்