< Back
மாநில செய்திகள்
வெவ்வேறு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

வெவ்வேறு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது

தினத்தந்தி
|
21 March 2023 2:56 AM IST

வெவ்வேறு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 59). இவரது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டுள்ளார். அப்போது ராஜ்குமார் என்பவரது இடத்தில் மின்கம்பம் நட்டு, மின் இணைப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மின்கம்பத்தை ராஜ்குமார் (40), மற்றும் அவரது தம்பி ராஜா (25) ஆகியோர் சேதப்படுத்தி உள்ளனர். இதனை கேட்க சென்ற சரவணனுக்கு அவர்கள் இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் முசிறி தாலுகா வாளவந்தி கணேசபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (53). இவரது வீட்டின் அருகே செந்தில், அவரது மனைவி ராணி, மணிகண்டன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நடைபாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக செந்தில் தரப்பினர், கோவிந்தராசு தரப்பை சேர்ந்த சரோஜா (60), பிச்சைமுத்து (53) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் செந்தில், லோகேஸ்வரன், மணிகண்டன், ராணி ஆகிய 4 பேர் மீது ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதே சம்பவத்தில் பிச்சைமுத்து, அவரது மனைவி ஜெயமணி(45) மற்றும் சிலர் தாக்கியதாக லோகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த செந்தில், மணிகண்டன் (21), கோவிந்தராசு (53), பிச்சைமுத்து (53) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்