< Back
மாநில செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 5:25 PM IST

காட்டாங்கொளத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 34), மறைமலைநகர் பகுதிகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (68), அரவிந்த் (29) ஆகியோரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைபொருட்களை விற்ற கணேஷ் (38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மண்ணிவாக்கம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்களை விற்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுருதீன் (24), மண்ணிவாக்கத்தை சேர்ந்த குஞ்சு மொய்தீன் (25) ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா, புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்