< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சூதாடிய 6 பேர் கைது
|16 Aug 2023 1:30 AM IST
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவில் உள்ள மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் தனிப்படை போலீசார் மனமகிழ் மன்றத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெட்டியபட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 30), பாண்டி (46), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரபதி (42), குப்பையடிபட்டியை சேர்ந்த வீரபாகு (47), திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த மூர்த்தி (39), அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.