< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
6 பேர் கைது
|7 Jun 2022 2:43 AM IST
இரு தரப்பினர் மோதல்; 6 பேர் கைது
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை அசோகர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளவரசனுக்கும் (29) இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், மாரியப்பன், இளவரசன், குமரேசன் (31), இசை செல்வம் (27) உள்ளிட்ட 6 பேரை பேட்டை போலீசார் கைது செய்தனர்.