< Back
மாநில செய்திகள்
கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!
மாநில செய்திகள்

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..!

தினத்தந்தி
|
14 Sept 2023 8:22 AM IST

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பும் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்கள், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்