சென்னை
திருமணமான 6 மாதத்தில் பூட்டிய வீட்டில் புதுப்பெண் பிணமாக மீட்பு
|வண்ணாரப்பேட்டையில் திருமணமான 6 மாதத்தில் பூட்டிய வீட்டில் புதுப்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெருவை சேர்ந்தவர் சம்சுஷேக் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மேற்கு முகப்பேரை சேர்ந்த ஜிலானி (35) என்பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவு உள்தாழ்பாள் போட்டபட்ட நிலையில் அலறல் சத்தம் கேட்டதல் அக்கம்பக்கத்தினர் வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜிலானி எரிந்த நிலையில் புடவையில் துக்கிட்டு தொங்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைகாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜிலானி தற்கொலை செய்வதற்காக உடலில் தீவைத்து கொளுத்தியதும், பின்னா் இதில் சாகாதால் தூக்கிட்டு தொங்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜிலானி தாய் சாவில் மர்மம் இருப்பதாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து கணவன் சம்சுஷேக்கை கைது செய்தார். பின்னர் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளது. திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.