< Back
மாநில செய்திகள்
108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 89 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 89 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்

தினத்தந்தி
|
10 Oct 2022 5:27 PM IST

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 89 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது மாவட்ட அளவில் 2-வது இடம் ஆகும்.

ஆம்புலன்ஸ் சேவை

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் வாரியாக தரவரிசை பட்டியலை 108 தலைமை அலுவலகம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் திருவள்ளூர் மாவட்ட திட்ட மேலாளர் சந்திப் குமார் தெரிவித்ததாவது:-

2-வது இடம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 72 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6 லட்சத்து 89 ஆயிரத்து 343 பேர் பயன் அடைந்து 2-வது இடம் வகிக்கிறது.

இதில் பிரசவ சேவையில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரத்து 94 கர்ப்பிணிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 762 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் முதலிடத்தை சென்னை மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்