< Back
மாநில செய்திகள்
அரசு காப்பகத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
மாநில செய்திகள்

அரசு காப்பகத்திலிருந்து 6 சிறுமிகள் தப்பியோட்டம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
6 April 2023 12:40 PM IST

சிறுமிகள் தப்பியோடியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற, கல்வியை தொடரமுடியாத குழந்தைகள் கல்வியை தொடர ஏற்பாடு செய்யப்பட்டு காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பியோடி உள்ளனர். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமிகள் தப்பியோடியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்