< Back
மாநில செய்திகள்
படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்டு
மாநில செய்திகள்

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்டு

தினத்தந்தி
|
14 July 2022 2:05 PM IST

கோடியக்கரையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.

நாகப்பட்டினம்,

இந்திய கடற்படை கப்பல் பித்ரா கோடியக்கரை அருகில் உள்ள பாக்கு நீரிணை அருகில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது நடுக்கடலில் நள்ளிரவில் படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்து கொண்டு இருந்தனர். இதனை கவனித்த கடற்படை வீரர்கள் உடனடியாக கடலில் தத்தளித்து கொண்டு இருந்த 6 இந்திய மீனவர்களையும் மீட்டனர். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்