< Back
மாநில செய்திகள்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
மாநில செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

தினத்தந்தி
|
11 July 2022 9:29 PM IST

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்திலிருந்து இன்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதனிடையே கச்சத்தீவுக்கும் கோடிய கரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களா என்பது குறித்து மீன் துறை அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்