< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
650 காய்களை கொண்ட 6 அடி உயர வாழைத்தார்
|18 Aug 2022 1:29 AM IST
650 காய்களை கொண்ட 6 அடி உயர வாழைத்தார்
திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். முன்னோடி விவசாயியான இவர், தனது வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். அதில் கற்பூரவள்ளி ரக வாழை மரம் ஒன்று குலை விட்டு இருந்தது. வாழை காய்கள் தேறிய நிலையில் அந்த வாைழத்தாரை வெட்டினார். 80 கிலோ எடை கொண்ட இந்த வாழைத்தாரில் 650 காய்கள் உள்ளன. 6 அடி உயரம் உள்ள இந்த வாைழத்தாரை அந்த பகுதியை சேர்ந்த பலரும் பார்த்து சென்றனர்.