திண்டுக்கல்
வெறிநாய் கடித்து 6 மாடுகள் காயம்
|வேடசந்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 மாடுகள் காயம் அடைந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஒரு பசு மாடு மற்றும் கன்றுகுட்டி வளர்த்து வருகிறார். அதனை தனது வீட்டுக்கு அருகே கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம் அங்கு வந்த வெறிநாய் ஒன்று கன்றுகுட்டியை கடித்து குதறியது. இதில் கன்றுகுட்டி காயம் அடைந்தது. இதேபோல் அந்த கிராமத்தில் செல்வம் என்பவரது பசு மாட்டையும், நடராஜ் என்பவரது 2 எருமை மாடுகளையும், பழனிசாமி என்பவரது எருமை மாட்டையும், பாலசுப்பிரமணி என்பவரது கன்றுகுட்டியையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் நேற்று மட்டும் 4 மாடுகள், 2 கன்றுகுட்டிகள் காயம் அடைந்தது. அந்த நாயை அப்பகுதி மக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அது தப்பித்து ஓடி விட்டது. இந்த வெறிநாய்கள் தொல்லையால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் சாைலயோரம் இறைச்சி கழிவுகளை கடைக்காரர்கள் கொட்டி செல்கின்றனர். அந்த இறைச்சி கழிவுகளை தின்று விட்டு நாய்கள் வெறி பிடித்து சுற்றி திரிவதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே சாலையோரம் இறைச்சி கழிவுகளை ெகாட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்ைக விடுத்துள்ளனர்.