< Back
மாநில செய்திகள்
அரசு கல்லூரியில் 6 கணினிகள் திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

அரசு கல்லூரியில் 6 கணினிகள் திருட்டு

தினத்தந்தி
|
22 Jun 2023 1:36 AM IST

அரசு கல்லூரியில் 6 கணினிகள் திருட்டு

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி கணினித்துறை பயன்பாட்டிற்காக புதிதாக 45 கணினிகள் வாங்கப்பட்டன. அந்த நேரத்தில் தேர்வு நடைபெற்றதால் இந்த 45 கணினிகளையும் ஒரு அறையில் வைக்கப்பட்டு அந்த அறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மர்ம நபர்கள் சிலர், நள்ளிரவில் அறை கதவின் பூட்டை உடைத்து அறைக்குள் புகுந்தனர். அங்கிருந்து 6 கணினிகளை திருடி சென்றுவிட்டனர். வழக்கம்போல் விடுமுறை முடிந்து 2 மாதத்திற்கு பிறகு கல்லூரிக்கு வந்த பேராசிரியர்கள், கணினிகள் வைக்கப்பட்டு இருந்த அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது 6 கணினிகளை காணவில்லை. மர்மநபர்கள் சிலர், கணினிகளை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்