< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற 6 பேர் கைது
|6 Jun 2022 12:09 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரிஷிவந்தியம்,
பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீசார் நாகல்குடி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பீமன் (வயது 55) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் மதுபாட்டில்கள் விற்றதாக ஓடியந்தல் ஏழுமலை (46), சின்னக்கொள்ளியூர் கோவிந்தம்மாள் (49), வாணாபுரம் ஏழுமலை (44), ஏந்தல் கோவிந்தம்மாள் (47), இளையனார் குப்பம் மஞ்சுளா (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மொத்தம் 42 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.