< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை, மெட்ரோ ரெயில்களில் கடந்த 4 மாதங்களை விட மே மாதம் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணம்..!
|1 Jun 2023 11:57 AM IST
சென்னை மெட்ரோ ரெயில்களில் மே மாதத்தில் மட்டும் 72.68 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில்களில் மே மாதத்தில் மட்டும் 72.68 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் மே மாதத்தில் அதிகபட்சமாக கடந்த 24-ம் தேதியில் 2,64,974 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.