< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது
மாநில செய்திகள்

தமிழகத்தில் 58 பேருக்கு கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது

தினத்தந்தி
|
19 Nov 2022 12:08 AM IST

தமிழகத்தில் நேற்று புதிதாக 26 ஆண்கள், 32 பெண்கள் உள்பட மொத்தம் 58 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று புதிதாக 26 ஆண்கள், 32 பெண்கள் உள்பட மொத்தம் 58 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 20 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 185 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்