பெரம்பலூர்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.58½ லட்சம் வசூல்
|சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.58½ லட்சம் வசூலானது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எண்ணப்பட்டன. கோவில் உண்டியல்களில் இருந்து வருவாயாக ரூ.58 லட்சத்து 61 ஆயிரத்து 937 ரொக்கமும், 225 கிராம் தங்கமும், 805 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 185 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த ஜூலை மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.