< Back
மாநில செய்திகள்
571 கட்டிடங்களை இடிக்க வேண்டும்-மாநகராட்சி நோட்டீசு
மதுரை
மாநில செய்திகள்

571 கட்டிடங்களை இடிக்க வேண்டும்-மாநகராட்சி நோட்டீசு

தினத்தந்தி
|
9 Jun 2022 2:10 AM IST

571 கட்டிடங்களை இடிக்க வேண்டும்-மாநகராட்சி நோட்டீசு

மதுரை

மாநகரில் உள்ள 571 கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி உள்ளது.

100 வார்டுகள்

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல நூற்றாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கட்டிடங்கள் சேதமடைந்து, பழமையானதாக உள்ளதால் அடிக்கடி இடிந்து விழுகிறது. அதனால் அருகில் இருக்கும் கடைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் பலியும் உண்டாகிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மண்டலம் 1-ல் 99 கட்டிடங்களுக்கும், மண்டலம் 2-ல் 148 கட்டிடங்களும், மண்டலம் 3-ல் 104 கட்டிடங்களும், மண்டலம் 4-ல் 220 கட்டிடங்களும் என மொத்தம் 571 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

நோட்டீசு

இந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் உங்களது பழமையான இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த கட்டிடம் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்குரிய கட்டணத்தை அபராதத்துடன் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மேயர் இந்திராணி கேட்டு கொண்டு உள்ளார்.

மேலும் செய்திகள்