< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொந்தகை அகழாய்வில் 57 முதுக்கள் தாழிகள் கண்டெடுப்பு
|14 Sept 2022 3:35 AM IST
எந்தவொரு சேதமும் இல்லாமல் முழுமையாக மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
சிவகங்கை,
சிவாகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 35 தாழிகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் போது அந்த முதுமக்கள் தாழிகளுக்குள் 74 சூதுபவள மணிகள், மனித எலும்புக்கூடுகள், இறுதிச்சடங்குக்கு பயன்படுத்திய மண்பாண்டங்கள் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன.
அதே போல எந்தவொரு சேதமும் இல்லாமல் முழுமையாக மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அந்த தாழிகளை திறக்கும் பட்சத்தில் மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.