ராணிப்பேட்டை
பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 56-வது ஆண்டு அன்னதானம்,
|ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 56-வது ஆண்டு அன்னதானம், விழா நடைபெற்றது.
ஆற்காடு
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 56-வது ஆண்டு அன்னதானம், விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் மூலமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தொடர்ந்து நாதசங்கமம், மகாதீபாரதனை, திருப்படிவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலையடிவார அன்னதான கூடத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதினம், குருமகாசன்னிதானம், சிவஞானபாலய சுவாமிகள் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலவை சச்சிதானந்தசுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமிகள், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், மகாத்மாகாந்தி இலவச முதியோர் இல்ல தலைவர் ஜெ.லட்சுமணன், துணைத் தலைவர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன், கோவில் செயல் அலுவலர் சங்கர், மற்றும் மெய்ஞான விழா அன்னதானகுழுவினர், தொழிலதிபர்கள், உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.