< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 565 மனுக்கள் பெறப்பட்டன
|9 Oct 2023 11:16 PM IST
அரியலூர் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 565 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 565 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதில் தனித்துணை கலெக்டர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.