56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகள் - பொங்கலுக்காக தயாரிப்பு பணி மும்முரம்
|பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக ஈரோடு விசைத்தறியாளர்கள் 56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு,
பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக ஈரோடு விசைத்தறியாளர்கள் 56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 420 விசைத்தறிகள் மூலம் 49 லட்சத்து 46 ஆயிரத்து 683 சேலைகளும், 8 ஆயிரத்து 567 தறிகள் மூலம் 56 லட்சத்து 78 ஆயிரத்து 804 வேட்டிகளும் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தாண்டு இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக முதல் தவணையாக ரூ. 243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேட்டி, சேலைகள் உற்பத்தியானது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும், மொத்த வேட்டி, சேலைகளில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி செய்யப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க கைத்தறி ஆணையர் உத்தரவிட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.