கன்னியாகுமரி
அருமனை அருகே 56 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
|அருமனை அருகே கடையாலுமூட்டில் கடைகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட 56 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருமனை:
அருமனை அருகே கடையாலுமூட்டில் கடைகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட 56 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் வாகன சோதனை
அருமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கடையாலுமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கடைகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் ஒரு மினி டெம்போ வந்தது. அந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
56 கிலோ குட்கா
அப்போது அந்த வாகனத்தில் 56 கிலோ குட்கா மற்றும் 2 கிலோ கூலிப் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இவற்றை கடைகளுக்கு வினியோகம் செய்ய கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த குட்கா மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தில் இருந்த களியலை சேர்ந்த அருள்தாஸ் (வயது45), சிதறாலை சேர்ந்த எட்வின் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.