< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜனதாவினர் 56 பேர் கைது
|20 Jun 2023 12:31 AM IST
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜனதாவினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் தச்சன்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்து இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று லால்குடி ரவுண்டானா பகுதியில் பா.ஜனதா சார்பில் தச்சன்குறிச்சி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமை தாங்கினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் உள்பட 56 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.