கள்ளக்குறிச்சி
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 557 மனுக்கள் பெறப்பட்டன
|கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 557 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 557 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர் ஷ்ரவன்குமார், அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், மாவட்ட சமூக நலத்துறை தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.