< Back
மாநில செய்திகள்
ஆவடி பகுதியில் தொடரும் வேட்டை - மேலும் 55 ரவுடிகள் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி பகுதியில் தொடரும் வேட்டை - மேலும் 55 ரவுடிகள் கைது

தினத்தந்தி
|
11 July 2023 12:24 PM IST

குற்ற சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சங்கர், குற்ற சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கொலை, கொள்ளை முயற்சி, கஞ்சா, அடிதடி மற்றும் பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று காலை நடத்திய தொடர் வேட்டையில் மொத்தம் 55 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் கொலை குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 19 பேர், கொள்ளை முயற்சி வழக்குகளில் 3 பேர், கஞ்சா வழக்குகளில் 7 பேர், பிடியாணை குற்றவாளிகள் 2 பேர் மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 24 பேர் என மொத்தம் 55 பேர் அடங்குவார்கள்.

மேலும் மணலி பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ஜோபிரவின் (22), பிரவீன்குமார் (22), பாலாஜி என்ற அப்பு (24), செல்வம் (19) ஆகிய 4 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அத்துடன் கொரட்டூர் பகுதியில் 4 கத்திகளுடன் சுற்றிய ஜெயசீலன், அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரவுடிகள் மீதான அதிரடி நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 3-ந் தேதி நடந்த வேட்டையில் 89 ரவுடிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்