< Back
மாநில செய்திகள்
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 540 கிலோ கஞ்சா சிக்கியது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 540 கிலோ கஞ்சா சிக்கியது

தினத்தந்தி
|
20 Jun 2022 6:37 PM GMT

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய 540 கிலோ கஞ்சா சிக்கியது

ராமேசுவரம்

தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட 540 கிலோ கஞ்சா சிக்கியது.

540 கிேலா கஞ்சா

ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதி வழியாக அவ்வப்போது இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. இந்தநிலையில் இலங்கை மன்னார் மாவட்ட கடற்கரை பகுதியில் கிடந்த பார்சல்களை இலங்கை கடற்படையினர் பிரித்து சோதனை செய்தனர். சோதனை செய்தபோது அதில் சுமார் 170-க்கும் மேற்பட்ட பார்சல்களில் 540 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அந்த பார்சலை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் இதை கடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சா பார்சல்கள் அனைத்தும் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதி வழியாகவே கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி கொண்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசாரணை

குறிப்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இந்த கஞ்சா பார்சல்கள் கடத்திச் செல்லப்பட்டு நடுக்கடலில் இலங்கையில் இருந்து வந்த கடத்தல் ஏஜெண்டுகளிடம் கொடுத்து இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் கஞ்சா பார்சல்களை ஏற்றிச்சென்ற கடத்தல்காரர்கள் யார்? எந்த படகில் கடத்தி சென்றனர்? என்பது குறித்தும் கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்